ராமேசுவரம் திருக்கோவிலில் வெளிமாநில சாதுக்கள் சுவாமி தரிசனம்.

புதன்கிழமை, 6 மார்ச் 2019      ராமநாதபுரம்
6 rms news

.ராமேசுவரம்-  ராமேசுவரம் ராமாநாதசுவாமி   திருக்கோவிலில்  மாசி மகா சிவராத்திரி திருவிழாவையொட்டி வெளி மாநில சாத்துக்கள் நேற்று சிறப்பு பூஜைகல் செய்து சுவாமி தரிசனம் செய்தனர். இம்மாதம் 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கப்படவுள்ளது.
   ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் மாசிமகா சிவராத்திரி திருவிழா 12 நாட்கள் நடைபெறும்.இந்த திருவிழாவில் குஜராத்,உத்திர பிரதேசம்,மத்திய பிரதேசம்,ஹரிதுவார் போன்ற மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான சாதுக்கள்,பக்தர்கள் என வந்து சுவாமி தரிசனம் செய்து செல்வார்கள்.இதனையடுத்து திருக்கோவிலில் நேற்று சிவராத்திரி நாளை முன்னிட்டு இரவு முழுவதும் வெளியூர்,வெளிமாநில பகுதிகளையை சேர்ந்த பக்தர்களும்,உள்ளூர் பக்தர்களும் மற்றும்,சாதுக்களும் என 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் திருக்கோவில் பிரகாரகங்களில் விளக்கு பொருத்தி சுவாமி வழிபாடு செய்தனர்.பின்னர் சுவாமிக்கு அபிஷேகங்கள் செய்து வழிபட்டனர்.இதனால் ராமநாதசுவாமி,பர்வதவர்த்தினம் அம்மன் சன்னதியில் இரவு முழுவதும் பால்,பன்னீர்,பழம்,போன்ற வகையில் 21 பொருள்களால் தொடர்ந்து அபிஷேகம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.மேலும் தீபாராதணை வழிபாடுகளை நடைபெற்றதுஇதனை தொடர்ந்து வெளிமாநில சாதுக்கள் ராமேசுவரம் சன்னதி தெருவில் அமைந்திருக்கும் குஜராத் மாநிலத்தை சேர்ந்த பாபா மடம் நிர்வாகி சாது பஜ்ரங்கதாஸ் பாபா தலைமையில் வெளிமாநில பக்தர்கள் காசியில் எடுத்துவரப்பட்ட புனித நீரை கும்பத்தில் வைத்து அப்பகுதியிலிருந்து ஊர்வலமாக திருக்கோவில் வருகை தந்தனர்.பின்னர் திருக்கோவில் மூன்றாம் பிரிகாரத்தை சுற்றி வலம் வந்து ராமநாதசுவாமி சன்னதியில் அபிஷேகம் செய்தனர்.பின்னர் சன்னதியில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு சிவாமியின் அருள் பெற்றனர். இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.கட்சியின் மாவட்ட தலைவர் முரளிதரன்,மாவட்ட இந்துமுன்னணி தலைவர் ராமமூர்த்தி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து