முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.இ.தீவுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்: இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

புதன்கிழமை, 6 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

பேர்ஸ்டோவ் : வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் பேர்ஸ்டோவின் அதிரடியால் இங்கிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது,
வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் களம் இறங்கியது. ஷாய் ஹோப் (6), கிறிஸ் கெய்ல் (15), ஹெட்மையர் (14), பிராவோ (30) ஆகியோர் சீரான இடைவெளியில் வெளியேறினார்கள்.

அதன்பின் வந்த நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி 37 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் 58 ரன்கள் குவித்தார். இவரது அதிரடியால் வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி சார்பில் டாம் குர்ரான் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் 161 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. அலெக்ஸ் ஹேல்ஸ் 11 ரன்னிலும், ஜோ ரூட் ரன்ஏதும் எடுக்காமலும், மோர்கன் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆனால் பேர்ஸ்டோவ் அதிரடியாக விளையாடி 40 பந்தில் 9 பவுண்டரி, 2 சிக்சருடன் 68 ரன்கள் குவித்தார். டேன்லி 30 ரன்களும், பில்லிங்ஸ் 18 ரன்களும் அடிக்க இங்கிலாந்து 18.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 161 அடித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் காட்ரெல் மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது போட்டி வருகிற 8-ந்தேதி நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து