முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒருநாள் போட்டியில் 2000 ரன்கள் - 150 விக்கெட்டுகள்: கபில் தேவ், சச்சினின் சாதனை பட்டியலில் இணைந்த ஜடேஜா

புதன்கிழமை, 6 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

நாக்பூர் : ஒருநாள் போட்டியில் 2000 ரன்கள் மற்றும் 150 விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர்களில் கபில் தேவ், சச்சினினை அடுத்து ஜடேஜா இடம்பிடித்துள்ளார்.

242 ரன்களுக்கு...

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. கேப்டன் கோலியின் 116, குல்தீப் யாதவ் 3 விக்கெட் போன்றவை அணியின் வெற்றிக்கு வித்திட்டன. முதலில் ஆடிய இந்தியா 250 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய ஆஸி. 242 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

3-வது வீரர்...

இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் 2000 ரன்கள், 150 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார் ரவீந்திர ஜடேஜா. இதற்கு முன்பு 1990 ரன்கள் எடுத்திருந்த ஜடேஜா, ஆஸிக்கு எதிரான 2-வது போட்டியில் 10 ரன்கள் எடுத்தபோது சாதனைப் பட்டியலில் இணைந்தார். கபில் தேவ், சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்ததாக ஒருநாள் கிரிக்கெட்டில் 2000 ரன்கள், 150 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றார். பிறகு அவர் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.

முதல் 3 வீரர்கள்

1) கபில் தேவ் (3783 ரன்கள் + 253 விக்கெட்டுகள்).
2) டெண்டுல்கர் (18426 ரன்கள் + 154 விக்கெட்டுகள்).
3) ரவீந்திர ஜடேஜா (2011 ரன்கள் + 172 விக்கெட்டுகள்).

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து