முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் விதிமீறல்களை புகார் அளிக்க செயலி - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

வியாழக்கிழமை, 7 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

சென்னை : மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் விதிமீறல் தொடர்பாக சி விஜில் செயலி மூலம் புகார் அளிக்கலாம் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

ஆயத்த பணியில் ஆணையம்

மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் கமி‌ஷன் செய்து வருகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து பல்வேறு கட்சித் தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் தேர்தலுக்கான பொதுக்கூட்டம், பிரச்சாரம் குறித்த திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.  இன்னும் சில தினங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால், அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. கூட்டணி அமைப்பது, தொகுதி ஒதுக்கீடு போன்றவற்றில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதேபோல் தேர்தல் கமிஷனும் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

புகார் அளிக்க செயலி

இந்நிலையில் நேற்று காலை தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் குறித்து தமிழக தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலில் விதிமீறல் உள்ளிட்ட புகார்கள் இருந்தால் பொதுமக்கள், ‘சி விஜில்’ (C Vigil) எனும் செயலியின் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்தலாம். தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் குறித்த விவரங்கள் அறிய 1950 எனும் எண்ணை தொடர்பு கொண்டு விவரங்கள் அறியலாம். சேலத்தில் 212 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். அந்த வாக்குச்சாவடிகளுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

67,664 வாக்குச்சாவடிகள்

தேர்தலுக்காக தமிழகத்தில் மொத்தம் 67,664 வாக்குச்சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. 1,67,932 வாக்குப்பதிவு இயந்திரங்களும், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை அறிய 88,447 விவிபேட் இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன. தேர்தல் பணியில் 3,36,536 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இது தவிர வாக்காளர் பட்டியலில் புதியதாக சேர விரும்புபவர்களுக்கான கால அவகாசம் இன்னும் உள்ளது. வாக்காளர்கள் இந்த வாய்ப்பைப்  பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து