முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கமலின் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் கோவை சரளா

வெள்ளிக்கிழமை, 8 மார்ச் 2019      அரசியல்
Image Unavailable

சென்னை, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் நகைச்சுவை நடிகை கோவை சரளா இணைந்தார்.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக இருப்பவர் கோவை சரளா. நூற்றுக்கணக்கான படங்களுக்கும் மேல் நடித்துள்ள கோவை சரளா இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. முந்தானை முடிச்சு படத்தில் அறிமுகமான கோவை சரளா கதாநாயகியாக நடித்த ஒரே படம் கமல்ஹாசனின் சதிலீலாவதி. கோவை சரளா நேற்று கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசன் முன்னிலையில் நேற்று சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சி செயற்குழு உறுப்பினர்கள் கமீலா நாசர், ஸ்ரீபிரியா உள்பட பெண் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து