ராமநாதபுரம் மாவட்டத்தில் ‘போஷன் பக்வாடா” இரு வாரவிழா கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் துவக்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 8 மார்ச் 2019      ராமநாதபுரம்
8 COLLECTOR POSHAN ABHIYAN

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், சக்கரக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம், போஷன் அபியான் தொடங்கி ஒரு வருடம் நிறைவு பெறுவதை முன்னிட்டு லரும் 22.03.2019 வரையில் நடைபெறும் ‘போஷன் பக்வாடா” இரு வாரவிழாவினை மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் தலைமையேற்று துவக்கி வைத்தார்.
 மத்திய அரசு, பச்சிளங்குழந்தைகள், வளரிளம் பெண்கள், மகளிர் உள்ளிட்டோருக்கு ஏற்படும் உடல் ஆரோக்கியம் தொடர்பான பல்வேறு இடர்பாடுகளை களைந்திடும் நோக்கில் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளையும், விழிப்புணர்வு பணிகளையும் மேற்கொள்ள உத்தரவிட்டது.  அதனடிப்படையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 1,454 அங்கண்வாடி மையங்கள் மூலமாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.  குறிப்பாக, ஊராட்சி ஒன்றியங்கள் வாரியாக பச்சிளம் குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள் என முறையே கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
 மேலும், மகளிரிடத்தில் காணப்படும் இரத்தசோகை, எடை குறைவான குழந்தை பிறப்பு, 0-6 வயதுடைய குழந்தைகளிடத்தில் காணப்படும் உடல் மெலிவு மற்றும் உயரத்திற்கேற்ற எடையின்மை போன்ற பாதிப்புகளை தடுத்திடும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.  அந்த வகையில், போஷன் அபியான் திட்டம் தொடங்கி 1 வருடம் நிறைவு பெறுவதையொட்டி ‘போஷன் பக்வாடா” இரு வார விழாவாக கடைபிடித்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 அதனடிப்படையில்,  ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், சக்கரக்கோட்டை கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பாக ‘போஷன் பக்வாடா” இரு வாரவிழாவினை மாவட்ட கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் தலைமையேற்று துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தலைமையில் பள்ளி குழந்தைகள், அங்கண்வாடி பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் அனைவரும் ‘போஷன் பக்வாடா” உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.  தொடர்ந்து, பள்ளிக் குழந்தைகளிடத்தில் பேசுகையில், ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கம், கை, கால்களில் நகங்களை வெட்டி சுத்தமாக பராமரித்தல், சோப்பு போட்டு கை கழுவுதல் உள்ளிட்ட பழக்க வழக்கங்களை கடைபிடித்திட வேண்டுமென சிறார்களுக்கு மாவட்ட கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் டி.ராஜ்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேவுகபெருமாள், சாமியா, போஷன் பக்வாடா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஷாலினி, சக்கரக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மோகன்தாஸ் உட்பட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து