முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4-வது போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்லுமா இந்திய அணி ? மொகாலியில் இன்று நடக்கிறது

சனிக்கிழமை, 9 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

மொகாலி : இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி மொகாலியில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் வென்று இந்திய அணி தொடரை வெல்லுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

32 ரன்னில்...

இந்தியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. ராஞ்சியில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 313 ரன் குவித்தது. உஸ்மான் கவாஜா 113 பந்தில் 104 ரன்னும் (11 பவுண்டரி, 1 சிக்சர்), ஆரோன் பிஞ்ச் 93 ரன்னும் (10 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். குல்தீப் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் விளையாடிய இந்தியா 48.2 ஓவரில் 281 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 32 ரன்னில் வெற்றி பெற்றது.

விராட் கோலி தனி ஒருவராக போராடி சதம் அடித்தார். அவர் 95 பந்தில் 123 ரன் (16 பவுண்டரி, 1 சிக்சர்) குவித்தார். இந்த சதம் பலன் இல்லாமல் வீணானது. கும்மினஸ், ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா ஆகியோர் தலா 3 விக்கெட் கைப்பற்றினார்கள்.

பதிலடி கொடுக்கும்...

இந்த நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி மொகாலியில் இன்று நடக்கிறது. ராஞ்சி போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை வெல்லும் ஆர்வத்தில் இந்தியா உள்ளது. ஆஸ்திரேலிய அணி வெற்றியை நீட்டித்து தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்யும் வேட்கையில் உள்ளது.

இன்றைய போட்டியில் ஆடவுள்ள இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கேப்டன் விராட் கோலி ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்றைய போட்டியில் டோனி பங்கேற்கவில்லை. மேலும் கடைசி ஒருநாள் போட்டியிலும் அவருக்கு ஓய்வு அளிக்கப்படவுள்ளது.

உலக்கோப்பை வரை...

சர்வதேச போட்டிகளில் 16,967 ரன்கள் எடுத்திருந்த டோனி, 17 ஆயிரம் ரன்னை எட்டுவதற்கு 33 ரன்கள் தேவைப்பட்டது. 3-வது ஆட்டத்தின்போது அவர் 26 ரன்னில் ஆட்டம் இழந்தார். எனவே, 17 ஆயிரம் ரன் என்ற இலக்கை எட்டுவதற்கு இன்னும் 7 ரன் அவருக்கு தேவை.  இந்நிலையில், கடைசி 2 போட்டிகளில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், 17 ஆயிரம் ரன் இலக்கை எட்டுவதற்கு அவர் உலக கோப்பை வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து