ஐ லீக் கால்பந்து: சென்னை சிட்டி அணிக்கு சாம்பியன் பட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2019      விளையாட்டு
chennai city team champion 2019 03 10

கோவை : 12-வது ஐ லீக் கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்தது. 11 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை லீக்கில் மோதின. 12-வது ஐ லீக் கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்தது. 11 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை லீக்கில் மோதின. இதில் கோவை நேரு ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை சிட்டி எப்.சி. அணி, நடப்பு சாம்பியன் மினர்வா பஞ்சாப் எப்.சி. அணியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சென்னை சிட்டி அணி 3-1 என்ற கோல் கணக்கில் மினர்வா பஞ்சாப் அணியை வீழ்த்தியது. சென்னை சிட்டி அணியில் பெட்ரோ மான்சி (56-வது நிமிடம்) ஒரு கோலும், கவுரவ் போரா (69-வது, 90-வது நிமிடம்) 2 கோலும் அடித்தனர். மினர்வா பஞ்சாப் அணி தரப்பில் ரோலண்ட் பிலாலா 3-வது நிமிடத்தில் கோல் அடித்தார். லீக் ஆட்டங்கள் முடிவில் 13 வெற்றி, 4 டிரா, 3 தோல்வியுடன் 43 புள்ளிகள் பெற்ற சென்னை சிட்டி அணி சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. 13 வெற்றி, 3 டிரா, 4 தோல்வியுடன் 42 புள்ளிகள் பெற்ற ஈஸ்ட் பெங்கால் அணி 2-வது இடம் பெற்றது.

Ispade Rajavum Idhaya Raaniyum Movie Public Review | FDFS | Harish Kalyan, Shilpa Manjunath

Ispade rajavum idhaya raniyum Movie Review | Harish Kalyan | Shilpa Manjunat | Ranjit Jeyakodi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து