ஒரு நாள் போட்டியில் அதிக சிக்சர் : தோனியை முந்தினார் ரோகித் சர்மா

ஞாயிற்றுக்கிழமை, 10 மார்ச் 2019      விளையாட்டு
rohit sharma 2019 03 10

மொகாலி : மொகாலில் நேற்று நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் 2 சிக்சர்கள் அடித்து தோனியின் சாதனையை ரோகித் சர்மா முறியடித்தார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இதுவரை நடந்த 3 ஆட்டத்தின் முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி மொகாலியில் நேற்று நடைபெற்றது. நேற்றைய ஆட்டத்தின் ஆரம்பத்தில் ரோகித் சர்மா 216 சிக்சர்கள் அடித்து 2-வது இந்தியராக இருந்தார். டோனி இந்தியாவுக்காக 217 சிக்சர்கள் அடித்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா 92 பந்துகளில் 2 சிக்சர், 7 பவுண்டரியுடன் 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் ரோகித் சர்மா 2 சிக்சர்கள் அடித்தார். இதனால் தோனியை முந்தி முதல் இடத்தை பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தில் தோனி 217 சிக்சர்களுடனும், அடுத்து தெண்டுல்கர் 195 சிக்சர்களுடனும், கங்குலி 189 சிக்சர்களுடனும், யுவராஜ் சிங் 153 சிக்சர்களுடனும் அதற்கு அடுத்த நிலையில் உள்ளனர்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து