முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் விதிகள் அமல்: தனி விமானத்தை தவிர்த்த நிர்மலா

திங்கட்கிழமை, 11 மார்ச் 2019      அரசியல்
Image Unavailable

சென்னை, தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனக்கு வழங்கப்பட்டுள்ள தனி விமான சலுகையை தவிர்த்து சாதாரண விமானத்திலேயே பயணம் செய்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியான நிலையில் டெல்லியில் இருந்து சென்னை புறப்பட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தனக்கு வழங்கப்பட்டுள்ள அரசு கார் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் ஆகியவற்றை தவிர்த்து பா.ஜ.க தலைவருக்கான காரிலேயே விமான நிலையத்திற்கு வந்தார். தொடர்ந்து சாதாரண விமான பயணத்தை மேற்கொண்டார். தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பே அவர் சென்னை புறப்பட வேண்டி இருந்ததால் அவர்  இவ்வாறு செய்துள்ளார்.

இரவில் டெல்லி சென்ற போதும் தனியார் வாகனங்களையே அவர் பயன்படுத்தி உள்ளார். இதே போன்று விமான நிலையத்திற்கு தன்னை பார்க்க யாரும் வர வேண்டாம் என அதிகாரிகளுக்கும் அவர் உத்தரவிட்டிருந்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து