முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.க்கு எதிரான 4-வது ஒரு நாள்: இந்திய அணி படைத்த மோசமான சாதனை

திங்கட்கிழமை, 11 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியில் 350 ரன்களுக்கு மேல் அடித்தும் இந்திய அணி தனது கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனை ஒன்றைச் செய்துள்ளது.

143 ரன்கள்...

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மொஹாலியில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக, ஷிகர் தவான் 143 ரன்கள் விளாசினார்.இதனை அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 47.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 359 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதிகபட்ச ஸ்கோர்...

இவ்வளவு பெரிய இலக்கு நிர்ணயித்தும் இந்திய அணி தோல்வி அடைந்ததால் கிரிக்கெட் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.இந்தப் போட்டியில் பல்வேறு நல்ல சாதனைகள் மற்றும் மோசமான சாதனைகளும் படைக்கப்பட்டன. ஷிகர் தவான் தனது ஒரு நாள் கிரிக்கெட் தனது அதிகபட்ச ரன்களைப் பதிவு செய்தார். அதேபோல், ஆஸ்திரேலியாவின் ஹேண்ட்ஸ்கோம்ப் மற்றும் கவாஜா ஜோடி 192 ரன்கள் எடுத்ததே, இந்தியாவுக்கு எதிராக 3 விக்கெட்டுக்கு அடித்த அதிகபட்ச பார்ட்னர்ஷிப்.

மோசமான சாதனை...

இந்திய அணி தனது கிரிக்கெட் வரலாற்றில் மோசமான சாதனை ஒன்றைச் செய்துள்ளது. இதுவரை இந்திய அணி 27 முறை 350 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. அதில், 24 முறை முதலில் பேட்டிங் செய்துள்ளது. ஆனால், 350 ரன்களுக்கு மேல் அடித்து தோல்வியை அடைந்தது இதுவே முதல் முறை என்ற மோசமான சாதனையை இந்தியா செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து