சிரியாவில் ஐ.எஸ். வசமுள்ள நகரம் மீது விமானப்படை தாக்குதல்: 50 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 12 மார்ச் 2019      உலகம்
syra attack 2019 03 12

டமாஸ்கஸ் : சிரியா நாட்டின் கிழக்கு பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசமுள்ள கடைசி நகரத்தின் மீது அமெரிக்கா தலைமையிலான விமானப்படைகள் இன்று நடத்திய தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர்.

சிரியா நாட்டின் பல முக்கிய நகரங்களை முன்னர் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் அரசுப்படைகள் நடத்திய ஆவேச தாக்குதலில் கொல்லப்பட்டனர். இந்நிலையில், நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள டேய்ர் அல் - சோர் மாகாணத்துக்கு உட்பட்ட பக்ஹவுஸ் நகரில் உள்ள சில பண்ணை நிலங்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆக்கிரமித்து வைத்துள்ளனர். அவர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற கடந்த 10-ம் தேதிவரை அரசு இறுதிக் கெடு விதித்திருந்தது. ஆனால், அவர்கள் சரணடைய மறுத்து விட்டனர். அந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில் பக்ஹவுஸ் நகரின் மீது அமெரிக்காவை சேர்ந்த போர் விமானங்கள் தலைமையில் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட சுமார் 50 பேர் உயிரிழந்ததாக சிரியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து