10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை முதல் தொடக்கம்

செவ்வாய்க்கிழமை, 12 மார்ச் 2019      தமிழகம்
10th-exam 2019 03 12

சென்னை : இது தொடர்பான விவரங்கள் மற்றும் அரசுத் தேர்வுத் துறையால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்த செய்திக் குறிப்பு வருமாறு:-

2018-19 கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள், மார்ச் 2019 வருகிற 14.03.2019 அன்று தொடங்கி 29.03.2019 வரை நடைபெறவுள்ளது. மொழிப்பாடத் தேர்வுகளான தமிழ் (முதல் மற்றும் இரண்டாம்தாள்) மற்றும் மொழிப்பாடத் தேர்வுகளான தமிழ் (முதல் மற்றும் இரண்டாம்தாள்) மற்றும் ஆங்கிலம் (முதல் மற்றும் இரண்டாம்தாள்) ஆகிய 4 தேர்வுகள் பிற்பகல் 2.00 மணிக்கு துவங்கி 4.45 மணி வரையிலும், ஏனைய கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் மற்றும் விருப்ப மொழிப்பாடம் ஆகிய தேர்வுகள் காலையில் 10.00 மணிக்கு தொடங்கி 12.45 வரையிலும் நடைபெறவுள்ளது. வரையிலும் நடைபெறவுள்ளது.தேர்வுகால அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது. தேர்வுகால அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது. தேர்வுகால அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு தொடர்பான புள்ளி விவரங்கள்:-

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 12546 பள்ளிகளிலிருந்து மொத்தம் 959618 மாணாக்கர்கள் மற்றும் 38176 தனித்தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர். தேர்வெழுதவுள்ள பள்ளி மாணாக்கர்களில் மாணவியர் 476318, மாணவர்கள் 483300 ஆகும். மாணவிகளை விட 6982 மாணவர்கள் கூடுதலாக தேர்வெழுதுகின்றனர். தனித்தேர்வர்களில் 12395 பெண்களும், 25777 ஆண்களும் மற்றும் 4 திருநங்கைகளும் தேர்வெழுதவுள்ளனர். சென்னை மாநகரில் 567 பள்ளிகளிலிருந்து 213 தேர்வுமையங்களில் மொத்தம் 50678 மாணாக்கர்களில் 26012 மாணவிகள் மற்றும் 24666 மாணவர்கள் தேர்வெழுதவுள்ளனர்.

புதுச்சேரியில் 302 பள்ளிகளிலிருந்து 48 தேர்வுமையங்களில் மொத்தம் 16597 மாணாக்கர்களில் மாணவிகள் 8356 மற்றும் மாணவர்கள் 8241 தேர்வெழுதவுள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதுமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு மொத்தம் 3731 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இந்த ஆண்டு மட்டும் கூடுதலாக 133 புதிய தேர்வு மையங்கள் மாணாக்கர்களின் நலன் கருதி அனுமதிக்கப்பட்டுள்ளது.

சிறையில்தேர்வு மையம் தேர்வு மையம் தேர்வு மையம்:-

இவ்வாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி, மற்றும் புழல் ஆகிய சிறைகளிலுள்ள 152 சிறைவாசிகள், புழல், திருச்சி, பாளையங்கோட்டை மற்றும் கோவை ஆகிய 4 சிறைகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் தேர்வெழுதவுள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை தமிழ் வழியில் பயின்று தேர்வெழுதும் பள்ளி மாணாக்கருக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு தமிழ் வழியில் பயின்று பத்தாம் வகுப்பு தேர்வினை எழுதவுள்ள பள்ளி மாணாக்கரின் எண்ணிக்கை 522409 ஆகும். இத்தேர்விற்காக சுமார் 49000 ஆசிரியர்கள் அறைக் கண்காணிப்பாளர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மாற்றுத் திறனாளி தேர்வர்கள்:-

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் டிஸ்லெக்சியா குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், கண்பார்வையற்றோர், காதுகேளாதோர்/வாய்பேசாதோர் மற்றும் இதர மாற்றுத் திறனாளித் தேர்வர்களுக்கான சலுகைகள் (சொல்வதை எழுதுபவர் நியமனம், மொழிப் பாடவிலக்களிப்பு, கூடுதல் 50 நிமிடங்கள்) அரசுத் தேர்வுத் துறையால் ஒப்பளிக்கப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு தேர்வு மையங்களில் தரைதளத்தில் தேர்வெழுதும் வகையில் தனி அறைகள் ஒதுக்கிடவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத் திறனாளி தேர்வர்கள் அனைவருக்கும் கூடுதல்

50 நிமிடங்கள் உட்பட அன்னார் கோரிய சலுகைகள் சேர்த்து சுமார் 5979 தேர்வர்களுக்கு அரசுத் தேர்வுத் துறையால் ஒப்பளிக்கப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது. அரசாணையின்படி சலுகை வழங்கப்படும் என்ற அறிவுரை அனைத்து தேர்வர்களுக்கும் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டிலேயே அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு:-

தமிழகமெங்கும் பத்தாம் வகுப்பு தேர்வினை எழுதவுள்ள அனைத்து பள்ளி மாணவர்கள் / தனித்தேர்வர்கள் ஆகியோருக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் ஆன்-லைன் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டது. தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் தேர்வர்களுக்கான சிறப்பு அறிவுரைகள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்:-

தேர்வுப் பணியில் அனைத்து நிலைகளிலும் தகுந்த பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதிகளை சிறப்பான முறையில் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தேர்வுக் கால கண்காணிப்பு ஏற்பாடுகள்:

அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்டத் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கல்வித் துறை அலுவலர்களுடன் இணைந்து செயல்படுவர். அக்குழுவில் மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். அவரவர்களது மாவட்டங்களில் அவரவர் எல்லைக்குட்பட்ட தேர்வு மையங்களை திடீர் பார்வையிட்டு முறைகேடுகள், ஒழுங்கீனச் செயல்கள் ஏதும் நடைபெறா வண்ணம் தீவிரமாகக் கண்காணித்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறைச் சார்ந்த இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மற்றும் துணை இயக்குநர்கள் ஆகியோர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று தேர்வு முன்பணிகளையும், தேர்வுக்கால பணிகளையும் மேற்பார்வையிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட உரிய அரசாணை பெறப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக தோராயமாக சுமார் 5500 எண்ணிக்கையிலான பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் முதன்மைக் கல்வி அலுவலர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், உள்ளிட்ட அனைத்து ஆய்வு அலுவலர்களும் அம்மாவட்டத்திலுள்ள அனைத்து தேர்வு மையங்களையும் சரிசமமாக பிரித்துக் கொண்டு தேர்வு நாட்களின்போது தங்களுடன் கண்காணிப்பு குழுவை அழைத்துக் கொண்டு தேர்வு மையங்களைப் பார்வையிட்டு முறைகேடுகள் ஏதும் நடைபெறாவண்ணம் தீவிரமாக கண்காணித்திட ஏற்பாடுகள்

செய்யப்பட்டுள்ளது. மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த அலுவலர்கள் முக்கிய பாடங்களுக்கான தேர்வு நாட்களில் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக
சிறப்பு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அலைபேசி தடை:-

தேர்வு மைய வளாகத்திற்குள் அலைபேசியை எடுத்து வருதல் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுடன் அலைபேசியை கண்டிப்பாக எடுத்துவருதல் கூடாது. மேலும் தேர்வர்களது அலைபேசிகள் பராமரிப்பிற்கு தேர்வு மையங்கள் பொறுப்பேற்காது. அத்துடன் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வறையில் தங்களுடன் அலைபேசியை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவுரையை மீறி தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ அலைபேசி / இதர தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தேர்வுக் கட்டுப்பாட்டு அறை கைப்பேசி எண்கள் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை கைப்பேசி எண்கள்

9385494105 9385494105
9385494115 9385494115
9385494120 9385494120
9385494125 9385494125

மேற்காண் முன்னேற்பாட்டு பணிகள் அரசின் சீரிய வழிகாட்டலின்படி அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து