முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுவீடன் நிறுவனங்களில் எச்.ஆர். பணிக்காக பெண் முக அமைப்பில் நவீன ரோபா உருவாக்கம்

புதன்கிழமை, 13 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

ஸ்டாக்ஹோம் : சுவீடனில் வேலைக்கு ஆட்கள் எடுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் எச்.ஆர். பணிக்காக ரோபோ ஒன்று, பெண் போன்ற முக அமைப்பில், நவீன முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.

சுவீடனில் பிரபல கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணிக்கு ஆட்கள் எடுக்கும் ரோபோவை உருவாக்கி உள்ளது. இது மிகவும் நுட்பமான கணினி மொழிகள் கொண்டு வடிவமைக்கப்பட்டதாகும்.

இது குறித்து ரோபோ வடிவமைப்பாளர்கள் மற்றும் பயன்பாட்டாளர்கள் கூறியிருப்பதாவது:

சுவீடனில் உள்ள படித்து முடித்து வேலை தேடும் இளைஞர்கள் 73 சதவீதம் பேர், பாலினம், வயது மற்றும் தோற்றம் போன்றவற்றால் பணி கிடைப்பதில்லை என தெரிவித்திருந்தனர். இதனால் கார்ப்பரேட் நிறுவனங்களில் இன்டர்வியூ நடத்தி வேலைக்கு ஆட்கள் எடுக்கும் எச்.ஆர். பணிக்காக ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ பெண்ணின் முக அமைப்பு கொண்டதாகும். இதற்கு தங்காய் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த ரோபோவுடன் மைக்ரோ போன் கொண்டு எளிதாக உரையாடவும், அதன் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் இயலும். இந்த ரோபோ தற்போது சுவிடிஷ் மட்டுமே பேசக்கூடியதாகும். சுவீடனில் உள்ள மிகப்பெரிய கார்பரேட் நிறுவனத்தின் எச்.ஆர். அமைப்பினர், கடந்த ஆண்டு அக்டோபரில் இதனை சோதனை செய்தனர்.

இந்நிலையில் இந்த ரோபோ மற்ற நாடுகளுக்கு உதவி புரிய இந்த ஆண்டின் இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டிலோ தயார் நிலைக்கு வந்து விடும். தற்போது இந்த ரோபோ ஆங்கிலத்தில் பேச பயிற்சி எடுத்து வருகின்றது என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து