பாலியல் வழக்கு: போப் ஆண்டவரின் முன்னாள் நிதி ஆலோசகருக்கு 6 வருட சிறை

புதன்கிழமை, 13 மார்ச் 2019      உலகம்
financial adviser prison 2019 03 13

மெல்போர்ன் : போப் ஆண்டவரின் முன்னாள் நிதி அமைச்சரான ஆஸ்திரேலியாவை சேர்ந்த கார்டினல் ஜார்ஜ் பெல்லுக்கு எதிரான பாலியல் வழக்கில் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்க திருச்சபையின் மூத்த பாதிரியாரான ஜார்ஜ் பெல் மீது சிறார்களுக்கு எதிராக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 1990 -ன் பிற்பகுதிகளில், 13 வயது சிறுவர்கள் 2 பேரிடம் பாலியல் ரீதியாக தவறான முறையில் நடந்து கொண்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு விக்டோரியா மாகாணத்தில் உள்ள கவுண்டி நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிவுற்ற நிலையில், கர்டினல் பெல் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் ஆனதை அடுத்து, கார்டினல் பெல்லுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

போப் பிரான்ஸின் முன்னாள் நிதி அமைச்சரான கார்டினல் பெல், குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் 8 மாதங்கள் சிறை தண்டனை பெற்ற பிறகே பரோல் பெற அனுமதிக்கப்படுவார் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள 77 வயதான கார்டினல் பெல், தீர்ப்பை எதிர்ப்பு ஜூன் மாதத்தில் மேல் முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து