Idhayam Matrimony

லோக் ஆயுக்தா தலைவர் தேர்வு குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

புதன்கிழமை, 13 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டம்

லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தெரிவு குழு ஒன்று ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் அமைக்கப்பட்டது. லோக் ஆயுக்தா அமைப்பில் இடம் பெற விரும்பி விண்ணப்பித்த 183 பேரிடம் நேர்காணல் நடத்தி குறிப்பிட்ட நபர்களை ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான குழு தேர்வு செய்து தமிழக முதல்வரிடம் அறிக்கையை சமர்பித்துள்ளது. தெரிவு குழு அளித்த அறிக்கை மீதான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.

பங்கேற்கவில்லை...

இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபால் ஆகியோர் கலந்து கொண்டனர். எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் குழுவில் இடம்பெற்றுள்ள நிலையில் அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. கடந்த டிசம்பர் மாதம் 28 -ம் தேதி நடைபெற்ற முதல் லோக் ஆயுக்தாவின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேடுதல் குழுவை நியமிப்பதற்கான முதல் ஆலோசனை கூட்டத்திலும் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை. தேடுதல் குழு அளித்த அறிக்கை விரைவில் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பணியாளர் சீர்திருத்த துறை அதிகாரி ஸ்வர்ணா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து