சையத் முஸ்தாக் அலி டி20 இறுதிப்போட்டி: மகாராஷ்டிரா - கர்நாடகா இன்று மோதல்

புதன்கிழமை, 13 மார்ச் 2019      விளையாட்டு
Syed Mushtaq Ali Trophy 2019 03 13

இந்தூர் : சையத் முஸ்தாக் அலி டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் மகாராஷ்டிரா - கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

37 அணிகள்

இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய உள்ளூர் டி20 கிரிக்கெட்டான முஸ்தாக் அலி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் 37 அணிகள் பங்கேற்றன. இந்த அணிகள் ஐந்து பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. லீக் போட்டிகள் முடிவில் 10 அணிகள் ‘சூப்பர் லீக்’ சுற்றுக்கு முன்னேறின. ‘ஏ’ பிரிவில் ஐந்து அணிகளும், ‘பி’ பிரிவில் ஐந்து அணிகளும் இடம்பிடித்திருந்தன. ஒவ்வொரு பிரிவில் உள்ள அணிகளும் அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.

இன்று இறுதி...

அதனடிப்படையில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்திருந்த மகாராஷ்டிரா நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறின. ‘பி’ பிரிவில் கர்நாடகா நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தூரில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து