மசூத் அசார் விவகாரம்: சீனாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை

வியாழக்கிழமை, 14 மார்ச் 2019      உலகம்
united-nations 2019 02 20

வாஷிங்டன், ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத இயக்க தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது. இதற்கு சீனாவிற்கு அமெரிக்கா தனது கண்டனத்தையும், எச்சரிக்கையையும் தெரிவித்துள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களும் சீனாவை எச்சரித்துள்ளன.

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க கோரி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரான்சு, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் கடந்த பிப்ரவரி 27-ம் தேதி தீர்மானத்தை முன்மொழிந்தன. இது தொடர்பாக மூன்று முறை முயற்சிகள் நடைபெற்றாலும், சீனா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதற்கு முட்டுக்கட்டை போட்டு வந்தது. மசூத் அசாருக்கு எதிராக இந்தியா எடுக்கும் முயற்சிக்கு 4-வது முறையாக சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது. சீனாவின் இந்த செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அதிகாரி, சீனா தொடர்ந்து இது போன்று முட்டுக்கட்டை போட்டு வந்தால் பிற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து வேறு விதமாக கட்டாய நடவடிக்கைகள் எடுக்க நேரிடும் என்று கூறினார். 

சீனாவின் இந்த நடவடிக்கை பயங்கரவாதத்தை எதிர்த்து போராடுவதை விட தெற்காசியாவில் தனது ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்திக் கொள்ளவே பார்க்கிறது என அமெரிக்க செயலாளர் மைக்கேல் போம்பியோ தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து