அமெரிக்க ஒத்துழைப்புடன் இந்தியாவில் 6 அணுமின் நிலையங்கள் அமைக்க முடிவு

வியாழக்கிழமை, 14 மார்ச் 2019      உலகம்
whitehouse 2017-12 31

வாஷிங்டன், அமெரிக்க ஒத்துழைப்புடன் இந்தியாவில் 6 அணுமின் நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்தியா - அமெரிக்கா இடையேயான முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு பேச்சு வார்த்தை விஜய் கோகலே மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஆண்ட்ரே தாம்சன் இடையே நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அந்த அறிக்கையில், இந்தியாவில் 6 அமெரிக்க அணு மின் நிலையங்கள் அமைப்பது உட்பட பாதுகாப்பு மற்றும் சிவில் அணு ஒத்துழைப்பில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்த இருவரும் ஒப்புக் கொண்டனர் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2008-ம் ஆண்டு இந்தியா- அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுக்கு ஊக்கம் அளித்தது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டதால், அமெரிக்கா, பிரான்சு, ரஷ்யா, கனடா, அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, இலங்கை, இங்கிலாந்து, ஜப்பான், வியட்நாம், வங்காளதேசம், கஸகஸ்தான், தென்கொரியா ஆகிய நாடுகளுடன் இந்தியா சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வகை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Ispade Rajavum Idhaya Raaniyum Movie Public Review | FDFS | Harish Kalyan, Shilpa Manjunath

Ispade rajavum idhaya raniyum Movie Review | Harish Kalyan | Shilpa Manjunat | Ranjit Jeyakodi

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து