ஆம் ஆத்மியுடன் கூட்டணி: கருத்து கேட்கிறார் ராகுல்

வியாழக்கிழமை, 14 மார்ச் 2019      இந்தியா
rahul-gandhi 2019 01 11

புது டெல்லி, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பொதுமக்களின் கருத்தை கேட்டிருக்கிறார்.

டெல்லியில் மொத்தம் 7 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 7 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி விரும்பியது. ஆனால் தொகுதிகளை பங்கீட்டு கொள்வதில் காங்கிரஸ் தலைவர்களுக்கும், ஆம்ஆத்மி கட்சி தலைவர்களுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இதனால் 7 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போவதாக கெஜ்ரிவால் அறிவித்தார். வேட்பாளர்களின் பெயரையும் அவர் வெளியிட்டார்.

இந்த நிலையில் ஆம்ஆத்மியுடன் கூட்டணி அமைக்கலாமா? என்று காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் டெல்லியில் உள்ள பொதுமக்களிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கருத்து கேட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இதற்காக காங்கிரஸ் சார்பில் ஆடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் காங்கிரசின் திட்டங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆம்ஆத்மியுடன் சேர்ந்தால் நல்லதா? என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் காங்கிரஸ் கட்சியின் சக்தி செயலியை பயன்படுத்தி தங்களது கருத்துக்களை தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து தீர்மானிக்க ராகுல் திட்டமிட்டுள்ளார்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து