முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா இரட்டை வேடம் - ராகுல் பேட்டி

வியாழக்கிழமை, 14 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம் : சபரிமலை விவகாரத்தில் கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்டு அரசும், மத்தியில் ஆளும் பா.ஜனதாவும் இரட்டை வேடம் போடுகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார். 

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி  நாகர்கோவிலில் நடந்த பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அதன்பிறகு அவர் ஹெலிகாப்டர் மூலம்  திருவனந்தபுரம் புறப்பட்டுச் சென்றார். ராகுல் கேரளாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று கலந்து கொண்டார். திருவனந்தபுரத்தில் பேட்டி அளித்த ராகுல்காந்தி கூறியதாவது:-

சபரிமலை போன்ற பாரம்பரியம் மிக்க விஷயங்களில் நான் பக்தர்களின் பக்கமே இருப்பேன். சபரிமலை விவகாரத்தில் கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்டு அரசும், மத்தியில் ஆளும் பா.ஜனதாவும் இரட்டை வேடம் போடுகிறது. 

படித்தவர்கள் அதிகம் உள்ள கேரளாவில் வசிக்கும் மக்கள் வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சி அமையும்போது கேரளாவில் தொழில் வளம் பெருக செய்வோம். மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை கேரளாவில் இருந்து தொடங்குவோம்.

பா.ஜனதா கூட்டணியில் உள்ள சில தலைவர்களே மோடி மீது அதிருப்தியில் உள்ளனர். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதி. காங்கிரஸ் ஆட்சியில் மக்களுக்கு நன்மைகள் செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து