மாயாவதி, அகிலேஷ், அஜித்சிங் உ.பி.யில் ஒரே மேடையில் பிரச்சாரம்

வியாழக்கிழமை, 14 மார்ச் 2019      இந்தியா
akhilesh mayawati ajit 2019 03 14

புது டெல்லி, உ.பி.யில் பகுஜன் சமாஜின் மாயாவதி, சமாஜ்வாதியின் அகிலேஷ் சிங் யாதவ் மற்றும் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் அஜித் சிங் ஆகியோர் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.

உ.பி.யில் ஏழு கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக உ.பி.யின் மேற்குப்பகுதியில் ஏப்ரல் 11-ல் நடைபெறுகிறது. எனவே, மீரட்டில் மாயாவதி, அகிலேஷ் மற்றும் அஜித் சிங் ஒரே மேடையில் தம் பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளனர்.

உ.பி.யில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் எட்டு தொகுதிகளுக்கு முதல்கட்டத் தேர்தல் நடைபெறும். இங்குள்ள பாக்பத், முசாபர் நகர் மற்றும் மதுராவில் ராஷ்டிரிய லோக் தளம் போட்டியிடுகிறது. இதற்கான பிரச்சாரக் கூட்டங்களின் தேதிகள் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. உ.பி.யின் மூன்று முக்கிய கட்சிகளின் தலைவர்களும் ஒரே மேடையில் பேசுவதால் அவை அம்மாநிலத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து