பாலகோடு தாக்குதல்: தீவிரவாத முகாம் விடுதி அழிந்த படங்கள் வெளியீடு

வியாழக்கிழமை, 14 மார்ச் 2019      இந்தியா
Palakkodu Attack-photo-release 2019 03 14

புது டெல்லி, இந்திய விமானப்படை தாக்கியதில் பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாத முகாம் விடுதி அழிந்ததை உறுதி செய்யும் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர் இந்திய விமானப் படையினர், பாகிஸ்தானின் பாலகோடு பகுதியில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இறந்ததாக அரசு தெரிவித்தது. ஆனால் இதற்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதில் பாலகோட்டில் செயல்பட்டு வந்த ஜே.இ.எம். தீவிரவாத அமைப்பின் தங்கும் விடுதி கட்டிடம் அழிந்ததற்கான படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அந்த விடுதியின் பெயர் மர்க்காஸ் என்பதும் தெரியவந்துள்ளது. தாக்குதலுக்கு முன் விடுதி இருந்த இடத்தின் படமும், தாக்குதலுக்குப் பின்னர் விடுதி இருந்த இடம் சிதிலமடைந்து இருக்கும் படமும் வெளியிடப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான கட்டிடத்தின் மேற்பகுதியில் 3 பெரிய அளவிலான துளைகள் காணப்படுகின்றன. ஒரு மீட்டர் விட்டம் கொண்ட இந்தத் துளைகள், விமானப்படையினர் தாக்கியதால் ஏற்பட்டது என்பதும் தெரிகிறது. செயற்கைகோள் உதவியுடன் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்கள் தாக்குதல் நடத்தியதை தெளிவாக்குகின்றன.

தாக்குதல் நடைபெற்ற பிறகு எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படத்தில் கட்டிடம் இடிந்திருப்பது தெரிய வருகிறது. இந்தத் தாக்குதலின்போது விடுதிக் கட்டிடம் மட்டுமல்லாமல் மேலும் 2 கட்டிடங்களும் இடிந்துள்ளன. தீவிரவாதிகள் தங்கியிருந்த கட்டிடம் மீதும், 2 விருந்தினர் மாளிகைகள் மீதும் குண்டுகளை இந்திய விமானப் படையினர் வீசியது தெரியவந்துள்ளது. செயற்கைகோள் படத்தில் மரங்களுக்கு இடையே உள்ள கட்டிடங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், தாக்குதல் தொடர்பான படங்களை இந்திய அரசோ, சர்வதேச ஊடகங்களோ வெளியிடாததால் தாக்குதல் தொடர்பாக பாதுகாப்பு நிபுணர்கள் சந்தேகம் எழுப்பினர். ஆனால் தற்போது வெளியாகியுள்ள படங்கள் தாக்குதல் நடந்ததைக் குறிக்கின்றன.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து