இன்டியன்வெல்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச் - ஒசாகா தோல்வி

வியாழக்கிழமை, 14 மார்ச் 2019      விளையாட்டு
Djokovic and Osaka 2019 03 14

இன்டியன்வெல்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நோவக் ஜோகோவிச் (செர்பியா), 39-ம் நிலை வீரரான ஜெர்மனியின் பிலிப் கோல்ஸ்கிரீபரை சந்தித்தார்.

மழையால் பாதிக்கப்பட்டு மறுநாளில் தொடர்ந்த இந்த ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஜோகோவிச் 4-6, 4-6 என்ற நேர்செட்டில் பிலிப் கோல்ஸ்கிரீபரிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். ஜோகோவிச்சிடம் தொடர்ச்சியாக 11 முறை தோல்வி கண்ட கோல்ஸ்கிரீபர் அவருக்கு எதிராக முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்) 3-6, 1-6 என்ற நேர்செட்டில் 23-ம் நிலை வீராங்கனையான பெலின்டா பென்சிச்சிடம் (சுவிட்சர்லாந்து) அதிர்ச்சி தோல்வி கண்டு நடையை கட்டினார். ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்ற பிறகு நவோமி ஒசாகா சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். தொடர்ச்சியாக 11-வது வெற்றியை ருசித்த பெலின்டா பென்சிச் காலிறுதிக்கு முன்னேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து