முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி மக்களவை தொகுதி மற்றும் பெரியகுளம், ஆண்டிபட்டி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட கழகத்தினரிடையே கடும் போட்டி

வியாழக்கிழமை, 14 மார்ச் 2019      தேனி
Image Unavailable

தேனி - தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இத்தேர்தலில் தேனி தொகுதியில் கழக வேட்பாளராக  போட்டியிட மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் உள்ளிட்ட பலர்  தலைமை கழகத்தில் விருப்ப மனு கொடுத்துள்ளனர். மேலும் தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் போட்டியிட வேண்டி சென்னை விஜயகுமார், தேனி தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் பாலசந்திரன், மதுரை ராஜ்மோகன், தாராபுரம் ஆத்திக் உள்ளிட்டோரும் விருப்பமனு கொடுத்தனர். தேனி பாராளுமன்ற வேட்பாளருக்கான நேர்காணலும் நடைபெற்று முடிந்துள்ளது. மேலும் தேனி மாவட்டத்தில் காலியாக உள்ள பெரியகுளம் (தனி) மற்றும் ஆண்டிபட்டி  சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான விருப்ப மனு நேற்று முன்தினம் தலைமை கழகத்தில் பெறப்பட்டது. பெரியகுளம் (தனி) தொகுதிக்கு பெரியகுளம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் சுப்புரத்தினம், பெரியகுளம் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அன்பு, வீட்டுவசதி கூட்டுறவு சங்க தலைவர் முத்து, மாவட்ட மருத்துவரணி செயலாளர் ஆனந்த்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சிவக்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் தவமணி,  தேனி ஒன்றிய மாவட்ட பிரதிநிதி வீரமணிகர்ணன், தேனி நகர அம்மா பேரவை துணை செயலாளர் மயில்வேல்  உள்ளிட்ட பலர் விருப்பமனு கொடுத்துள்ளனர். ஆண்டிபட்டி தொகுதிக்கு மாவட்ட துணை செயலாளர் முருக்கோடைராமர்,  ஒன்றிய கழக செயலாளர் லோகிராஜன்,  கூடலூர் நகர செயலாளர் சோலைராஜ், தேனி ஒன்றிய கழக செயலாளர் ஆர்.டி.கணேசன், கம்பம் நகர செயலாளர் ஆர்.ஆர்.ஜெகதீஸ்,      உள்ளிட்ட பலரும் விருப்பமனு கொடுத்துள்ளனர். தேனி பாராளுமன்ற தொகுதி மற்றும் பெரியகுளம் (தனி), ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி  இடைத்தேர்தலில் போட்டியிட கடும் போட்டி நிலவி வருகிறது. தேனி பாராளுமன்ற தொகுதி, பெரியகுளம் (தனி), ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை கழக ஆட்சிமன்ற விருப்பமனு  இந்நிலையில் இத்தொகுதிகளில் பிரச்சாரம், வாக்கு சேகரித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் இன்று பெரியகுளத்தில் மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான் தலைமையில் நடைபெற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து