முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கிச்சூடு நூலிழையில் தப்பிய கிரிக்கெட் வீரர்கள்

வெள்ளிக்கிழமை, 15 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

கிறிஸ்ட்சர்ச், நியூசிலாந்து மசூதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருந்து வங்காளதேச கிரிக்கெட் வீரர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் டீன்ஸ் அவ் பகுதியில் ஹெக்லி பார்க் அருகே மிகப்பெரிய மசூதி இருக்கிறது. இந்த மசூதியில் நேற்று நண்பகல் தொழுகை நடந்து கொண்டிருந்த போது திடீரென நுழைந்த மர்ம நபர் ஒருவர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுடத்தொடங்கினார். இதனால், தொழுகையில் ஈடுபட்டிருந்த மக்கள் பலர் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினார்கள். பலர் தரையில் படுத்துக் கொண்டனர். ஆனால், துப்பாக்கிச் சூடு 10 முதல் 15 நிமிடங்கள் வரை நீடித்ததாக அதை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே, டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து சென்றுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணியினர், துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த மசூதிக்கு செல்ல இருந்துள்ளனர். அவர்கள், துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதும், அங்கிருந்து பத்திரமாக தப்பி சென்றனர். இது குறித்து வங்கதேச கிரிக்கெட் அணியின் செய்தித் தொடர்பாளர் ஜலால் யூனுஸ் கூறுகையில்,

அனைத்து கிரிக்கெட் வீரர்களும் மசூதிக்கு செல்வதற்காக பஸ்ஸில் மசூதிக்கு வந்தோம். மசூதி வளாகத்துக்குள் சென்ற போது துப்பாக்கிச் சூடு நடந்ததால் அங்கிருந்து ஓடி உயிர் தப்பினோம். யாருக்கும் எந்தவிதமான காயமும் ஏற்படவில்லை. பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆனால், அதிர்ச்சியில் உறைந்துள்ளார்கள். வீரர்கள் தங்கியுள்ள ஓட்டலுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து