நியூசிலாந்து மசூதி துப்பாக்கி சூடு குற்றவாளியின் அடையாளம் தெரிந்தது

வெள்ளிக்கிழமை, 15 மார்ச் 2019      உலகம்
New Zealand-gunman 2019 03 15

கிறிஸ்ட்சர்ச், நியூசிலாந்து மசூதி துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட குற்றவாளி அடையாளம் தெரிந்தது.
 
நியூசிலாந்து நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள அல் நூர் மசூதியில் தொழுகை நேரத்தில் உள்ளே புகுந்த அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 30 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச்சூடு தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இது போல் நகரில் பலவேறு இடங்களில் வெடிகுண்டுகள் நிரப்பிய கார்களை போலீசார் கண்டறிந்து அப்புறப்படுத்தி உள்ளனர்.

துப்பாக்கி சூடு குற்றவாளி ப்ரெண்டான் டாரன்ட் என்று பெயரிடப்பட்ட ஒரு ஆஸ்திரேலியராக டுவிட்டரில் தன்னை அடையாளம் காட்டி உள்ளான். 73 பக்கத்தில் தனது நோக்கங்களை அதில் அவன் தெரிவித்து உள்ளான். வீடியோ கேம் போல் குற்றவாளி இந்த துப்பாக்கிசூட்டை நடத்தி உள்ளான். இது குறித்த வீடியோ ஒன்றும் வெளியாகி உள்ளது.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து