தி.மு.க., கூட்டணி போட்டியிடும் தொகுதி பட்டியலை வெளியிட்டார் ஸ்டாலின்

வெள்ளிக்கிழமை, 15 மார்ச் 2019      தமிழகம்
stalin-election 2019 03 15

சென்னை, பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை  அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதில் ம.தி.மு.க.வுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் பாராளுமன்றத் தேர்தலுக்கான தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், ம.தி.மு.க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டது. மீதமுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது.  
இந்நிலையில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அதன் விவரம் வருமாறு:-

தி.மு.க போட்டியிடும் தொகுதிகள்:

சென்னை வடக்கு
சென்னை தெற்கு
மத்திய சென்னை
ஸ்ரீபெரும்புதூர்
காஞ்சிபுரம் (தனி)
அரக்கோணம்
வேலூர்
தர்மபுரி
திருவண்ணாமலை
கள்ளக்குறிச்சி
சேலம்
நீலகிரி (தனி)
பொள்ளாச்சி
திண்டுக்கல்
கடலூர்
மயிலாடுதுறை
தஞ்சாவூர்
தூத்துக்குடி
தென்காசி (தனி)
திருநெல்வேலி

காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள்:
திருவள்ளூர் (தனி)
கிருஷ்ணகிரி
ஆரணி
கரூர்
திருச்சிராப்பள்ளி
சிவகங்கை
தேனி
விருதுநகர்
கன்னியாகுமரி
புதுச்சேரி

ம.தி.மு.க- ஈரோடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - கோயம்புத்தூர், மதுரை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- திருப்பூர், நாகப்பட்டினம் (தனி)

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்- ராமநாதபுரம்

விடுதலை சிறுத்தைகள்- விழுப்புரம் (தனி), சிதம்பரம் (தனி)

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி- நாமக்கல்

இந்திய ஜனநாயக கட்சி - பெரம்பலூர்

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து