முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமி போட்டி - தேவகவுடா அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 15 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு, மாண்டியா தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் நிகில் குமாரசாமி போட்டியிடுவார் என்று தேவகவுடா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.  
 
கர்நாடகத்தில் மொத்தம் 28 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு இருகட்டமாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 18, 23-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலை காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து எதிர்கொள்கின்றன. இருகட்சிகள் இடையே நீண்ட நாட்களாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தது.

நீண்ட இழுபறிக்கு பிறகு  இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி காங்கிரஸ் 20 தொகுதிகளிலும், ஜனதாதளம்(எஸ்) 8 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இருகட்சிகள் இடையேயும் தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்படுவதற்கு முன்பே, ஹாசன் மற்றும் மாண்டியா ஆகிய தொகுதிகளில் தேவகவுடா பேரன்கள் போட்டியிடுவார்கள் என்ற தகவல் வெளியானது. அதாவது ஹாசனில் மந்திரி எச்.டி.ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணாவும், மாண்டியா தொகுதியில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமியும் போட்டியிடுவதாக கூறப்பட்டது. இதனால் அவர்களும் தங்களின் தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டினார்கள்.

இந்த நிலையில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் மாண்டியாவில் நடைபெற்றது. இதில் தேவகவுடா கலந்துகொண்டு, மாண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமி தான் வேட்பாளர் என்று அறிவித்து அறிமுகம் செய்து வைத்தார். அவர் பேசியதாவது:-

கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசித்த பிறகு மாண்டியா தொகுதியில் நிகில் குமாரசாமியை வேட்பாளராக நிறுத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி அவர் இந்த தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளார். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு பாடம் புகட்ட வேண்டும். அதற்காக காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்திற்கு என்னை அழைத்துள்ளனர். நான் கண்டிப்பாக பிரசாரம் செய்வேன். நான் பிரதமராக இருந்தபோது தான், ராணுவத்தில் முஸ்லிம்களை சேர்க்க விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்தேன்.

இவ்வாறு தேவகவுடா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து