முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக்கோப்பை போட்டிக்கு மனரீதியாக தயாராக உள்ளோம் : பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டி

வெள்ளிக்கிழமை, 15 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி மனரீதியாக தயாராக உள்ளது என்ற தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

15 வீரர்கள் மட்டும்...

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அளித்த பேட்டியில் கூறியதாவது:-உலகக்கோப்பை போட்டிக்கு மனரீதியாக இந்திய அணி வீரர்கள் தயாராக உள்ளனர். உலகக்கோப்பைக்கு 15 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்ய முடியும். ஆனால் தற்போது 18 முதல் 20 வீரர்கள் வரை தகுதியுடன் உள்ளனர். ஐபிஎல் போட்டி முடிந்தவுடன் உலகக்கோப்பை போட்டி தொடங்குகிறது. ஐபிஎல் போட்டியின்போது வீரர்கள் யாராவது காயம் அடைந்தால் அது கவலை அளிக்கும் வி‌ஷயமாக இருக்கும். இதனால் ஒவ்வொரு போட்டியையும் நான் கூர்ந்து கவனிப்பேன்.

கட்டுப்படுவேன்...

உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது பற்றி கிரிக்கெட் வாரியம் மற்றும் மத்திய அரசிடம் நான் முழுமையாக விட்டு விடுவேன். ஏன் என்றால் அவர்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரியும். அவர்கள் தக்க முடிவு எடுப்பார்கள். மத்திய அரசு என்ன முடிவு எடுக்கிறதோ அதை பின்பற்றுவோம். ஒருவேளை உலகக்கோப்பையில் விளையாட வேண்டாம் என்று கூறினாலும் நான் அரசின் முடிவுக்கு கட்டுப்படுவேன்.

உண்மைதான்...

விராட் கோலியின் ஆக்ரோ‌ஷத்தை நான் ஊக்குவிப்பதாக கேள்வி கேட்கிறார்கள். அது உண்மைதான். விளையாட்டு விதிமுறைக்குள்தான் அது உள்ளது. நாம் இங்கு வெற்றி பெற வந்திருக்கிறோம். இதனால் கடுமையான ஆட்டத்தை விதிமுறைக்குள் வெளிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து