முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாதிகளை வளர்ப்பதை பாக். நிறுத்த வேண்டும்: அமெரிக்கா

சனிக்கிழமை, 16 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : பாகிஸ்தான் எல்லை தாண்டிய தாக்குதல்களை தடுப்பதுடன், பயங்கரவாதிகளை வளர்ப்பதையும் நிறுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவுகிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவிற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ அளித்த பேட்டியில் கூறியதாவது:- பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் இந்தியாவில் என்ன நடந்தது என்பதை நாங்கள் கண்டோம். பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகளால் மோதல் ஏற்பட்டது. எனவே இந்த விஷயத்தில் பாகிஸ்தான் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். பயங்கரவாதிகளை வளர்ப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்.

அதிபர் டிரம்ப் நிர்வாகம் பாகிஸ்தானுக்கு எதிராக வேறு எந்த முந்தைய அரசாங்கங்களும் எடுக்காத நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளை தடுத்து நிறுத்துவதில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து