முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வியட்நாம் பேச்சுவார்த்தை தோல்வி: அமெரிக்கா மீது வடகொரியா குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 16 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

Source: provided

பியாங்யாங் : அமெரிக்கா ஒரு பொன்னான வாய்ப்பை தூக்கி எறிந்து விட்டது என்று வடகொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் இடையே வியட்நாமில் சமீபத்தில் நடந்த 2-வது பேச்சுவார்த்தை எந்தவித உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. இதனால் இருநாட்டு உறவில் மீண்டும் விரிசல் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. இந்த நிலையில், வடகொரியாவின் துணை வெளியுறவு மந்திரி சோ சன் ஹை, தூதரக அதிகாரிகள் மற்றும் அயல்நாட்டு பத்திரிகையாளருடன் தலைநகர் பியாங்யாங்கில்  அவசர ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர், வியட்நாம் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததன் மூலம் அமெரிக்கா ஒரு பொன்னான வாய்ப்பை தூக்கி எறிந்து விட்டது என தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், 15 மாதங்களாக ஏவுகணை மற்றும் அணுஆயுத சோதனைகளை நிறுத்தி வைத்திருப்பதற்கு கைமாறாக வடகொரியாவுக்கு பலன் அளிக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்காத வரையில் சமரசத்துக்கோ அல்லது புதிய பேச்சுவார்த்தைக்கோ வாய்ப்பு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து