முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் நிரந்தரமாக தங்குவதற்காக 80 பேருக்கு போலி திருமணம் நடத்தி விசா மோசடி செய்த இந்தியர் கைது

சனிக்கிழமை, 16 மார்ச் 2019      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவுக்கு வேலை தேடிவருபவர்கள் அங்கேயே சட்டவிரோதமாக நிரந்தரமாக தங்குவதற்கேற்ப போலி திருமணங்கள் நடத்தியதாக இந்தியர் ஒருவர் பிடிபட்டுள்ளார். அவருக்கு கடும் தண்டனை வழங்கப்பட உள்ளதாக அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

புளோரிடாவின் பனாமா நகரில் வசிக்கும் ரவி பாபு கொல்லா என்பவர் போலி திருமணங்களை நடத்தி விசா பெற்றுத் தரும் பணிகளில் கைதேர்ந்தவர். இவர் இதுவரை 80 பேரை இத்தகைய தவறான வழிகளில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற உதவியுள்ளார். அத்தகைய ஒரு வழக்கில் கையும் களவுமாக கைது செய்யப்பட்ட இந்தியர் ரவி மீதான குற்றச்சாட்டுக்கள் வரும் மே மாதம் 22-ம் தேதி அன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அன்றே அவருக்கு தண்டனை வழங்குவதற்கு அமெரிக்க நீதிமன்றம் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். 

இதற்கு உடந்தையாக இருந்ததாக கிறிஸ்டல் கிளாட் (40), என்ற பெண் கடந்த டிசம்பர் 28-ம் தேதி  விசா மோசடி சதியில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டதால் இரண்டு ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டார். ரவி பாபு கொல்லாவுக்கு உடந்தையாக செயல்பட்ட இப்பெண் அமெரிக்க குடிமகள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் தெற்கு பிராந்தியத்தில் உள்ள அலாபாமா மாகாணத்தில் மட்டுமே 80-க்கும் மேற்பட்ட திருமணங்களை ரவி கொல்லா நடத்தியுள்ளதாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விசா மோசடிகளுக்காக போலி திருணங்கள் நடத்தும் சதி செய்த வகைகளில் இவருக்கு அதிகபட்சம் 5 ஆண்டுகளும், பண மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்களில் அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து