முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்காளர் பட்டியலில் பாகுபலி, ஆப்பிள், இட்லி பெயர்கள் - கவனக்குறைவே காரணம் என்கிறது ஆணையம்

சனிக்கிழமை, 16 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : தெலுங்கானாவில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சிலரின் பெயர்கள் பாகுபலி, ஆப்பிள், இட்லி, செக்ஸ் என்ற ரீதியில் குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற வித்தியாசமான பெயர்களில் 37 வாக்காளர்களின் பெயர்கள் கண்டறியப்பட்டன. அவற்றில் சிலவற்றை தேர்தல் ஆணையம் உடனடியாக நீக்கி விட்டது.

இது குறித்து தெலுங்கானா தலைமைத் தேர்தல் அதிகாரி ரஜத் குமார் கூறும் போது, எழுத்துப் பிழை மற்றும் ஊழியர்களின் கவனக்குறைவு காரணமாக இந்தத் தவறு நேர்ந்திருக்கலாம். இதில் 18 பேரின் பெயர்களை நீக்கியுள்ளோம். சட்டசபை தேர்தலுக்குப் பிறகு, 17 லட்சம் வாக்காளர்களைப் புதிதாகச் சேர்த்துள்ளோம். சுமார் 2.5 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதில் 1.9 லட்சம் பெயர்கள் போலியானவை. 44 ஆயிரம் பேர் இறந்து விட்டனர். தொடர்ந்து வாக்காளர் பட்டியலைச் சீரமைத்து வருகிறோம். பட்டியலில் பாட்மிண்டன் வீரர் ஜ்வாலா கட்டா, ஐ.பி.எஸ். அதிகாரி கிருஷ்ண பிரசாத் ஆகியோரின் பெயர்கள் விடுபட்டுள்ளதாகத் தகவல் வந்துள்ளது. பொதுவாக சிலரின் பெயர்கள் விடுபடுவது வழக்கம்தான். வி.ஐ.பி.க்களின் பெயர் விடுபடும் போது பெரிய கவனத்தை ஏற்படுத்தி விடுகிறது. விரைவில் அவர்களது பிரச்சினை சரி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து