முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதி - பி.எஸ்.என்.எல்

சனிக்கிழமை, 16 மார்ச் 2019      வர்த்தகம்
Image Unavailable

புதுடெல்லி, தரைவழி இணைப்புகளுக்கு இலவச இணையதள வசதியை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தினந்தோறும் 5 ஜி.பி. டேட்டாக்களை பதிவிறக்கம் செய்யலாம்.
  
அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது அதிரடி சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் சாதாரண தொலைபேசி (தரைவழி இணைப்பு) கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச இணையதள வசதி அளிக்கும் திட்டத்தை பி.எஸ்.என்.எல். நிறுவனம்  அறிமுகம் செய்தது.

தரைவழி இணைப்பு பெற்றிருப்பவர்கள் இந்த இலவச அதிவேக பிராட்பேண்ட் வசதியை தொலைபேசி அழைப்பு மூலமே பெறலாம் என அறிவித்துள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனம், அதற்காக கட்டணமில்லா தொலைபேசி எண் ஒன்றையும் அறிவித்து உள்ளது. அதன்படி 18003451504 என்ற எண்ணில் அழைத்து இந்த இணையதள வசதியை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த வசதியை பெறுவதற்கு இணைப்பு கட்டணம் எதுவும் தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் மூலம் தினந்தோறும் 5 ஜி.பி. டேட்டாக்களை பதிவிறக்கம் செய்யலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து