முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.எஸ்.டி.க்காக ஜெட்லிக்கு விருது அளித்த மன்மோகன் - வலைதளங்களில் காங். மீது விமர்சனம்

சனிக்கிழமை, 16 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ஜி.எஸ்.டி அமல்படுத்தியதற்காக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விருது வழங்கிய விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியை சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

2017-ம் ஆண்டு மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஜி.எஸ்.டி.யால் சிறு தொழில்முனைவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் மட்டுமின்றி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஜி.எஸ்.டி. மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சித்ததுடன், இது பொருளாதார வளர்ச்சியை அதலபாதாளத்தில் தள்ளி விடும் என்று தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் டெல்லியில் நடந்த விழாவில், சேஞ்ச் மேக்கர் ஆப் இயர் அவார்டு என்ற விருது ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு அளிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி. கவுன்சிலின் தலைவர் என்ற முறையில் ஜி.எஸ்.டி.யை வெற்றிகரமாக அமல்படுத்தியதற்காக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அருண் ஜெட்லிக்கு வழங்கினார். இப்போது இதற்கு ராகுல் என்ன சொல்ல போகிறார் என சமூக வலைதளங்களில் பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். காங்கிரசின் இந்த இரட்டை நிலைப்பாட்டை பலரும் விமர்சித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து