முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடி வாக்குறுதியை நிறைவேற்றாததால் தினமும் விவசாயிகள் தற்கொலை - ராகுல்

சனிக்கிழமை, 16 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

பார்கார், மோடி அரசு வாக்குறுதியை நிறைவேற்றாததால் விவசாயிகள் தினமும் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.  

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஒடிசா மாநிலம் பார்கார் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

மோடி அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் நாட்டில் தினமும் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதாக செய்திகள் வருகிறது. மத்திய அரசு விவசாயிகள் நலன் பற்றி மிகவும் உயர்வாக பேசிவருகிறது. ஆனால் அவர்களது கடனையும் தள்ளுபடி செய்யவில்லை, நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையையும் உயர்த்தவில்லை.

ஒடிசாவின் ‘அரிசி கிண்ணம்’ என்று அழைக்கப்படும் பார்கார் மாவட்டத்திலும் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். மத்திய அரசும், மாநில பிஜூ ஜனதாதள அரசும் விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க தவறிவிட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

ராகுல் காந்தி தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு செய்தியை வெளியிட்டு, அதற்கு தனது கருத்தையும் தெரிவித்துள்ளார்.அந்த செய்தியில், இந்தியா மற்றும் வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்களை சேர்ந்த 108 பொருளாதார நிபுணர்கள் மற்றும் சமூக அறிவியலாளர்கள் இந்தியாவின் அரசு தகவலின் உறுதித்தன்மை பற்றி கேள்வி எழுப்பியுள்ளனர். ஆட்சியில் உள்ள கட்சியின் பொறுப்பற்ற தன்மையால் புதுப்பிக்கும் அணுகுமுறையோ, பொது தகவல்களை ஒருங்கிணைக்கவோ, நிறுவனங்களின் சுதந்திரத்தை மீண்டும் நிறுவவோ, புள்ளிவிவர நிறுவனங்களை ஒருங்கிணைக்கவோ முயற்சி மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரமும், வேலையில்லா திண்டாட்டம் பற்றிய தகவலை மறைக்கும் மோடி அரசுக்கு பொருளாதார நிபுணர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து