முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபை இடைத்தேர்தலில் விருப்பமனு வழங்கிய அ.தி.மு.க.வினரிடம் இன்று சென்னையில் நேர்காணல் - இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். நடத்துகின்றனர்

சனிக்கிழமை, 16 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பமனு செய்த அ.தி.மு.க.வினரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று நேர்காணல் நடத்துகின்றனர்.

நேர்காணல்...

தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலுடன் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதில் அ.தி.மு.க வேட்பாளர்களாகப் போட்டியிட, விருப்ப மனு அளித்துள்ள அ.தி.மு.க.வினருக்கான நேர்காணல் இன்று காலை 9.30 மணிக்கு அ.தி.மு.க தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெறுகிறது.

17 தொகுதிகளுக்கு...

இந்த நேர்காணலில் இடைத்தேர்தல் நடைபெறும் பெரம்பூர், தஞ்சாவூர், திருப்போரூர், ஆண்டிபட்டி, பூந்தமல்லி (தனி), பெரியகுளம் (தனி) சோளிங்கர், நிலக்கோட்டை (தனி), குடியாத்தம் (தனி), சாத்தூர், ஆம்பூர், மானாமதுரை (தனி) , ஓசூர், பரமக்குடி (தனி), பாப்பிரெட்டிபட்டி, விளாத்திகுளம், அரூர் (தனி) ஆகிய 17 தொகுதிகளில் விருப்பமனு வழங்கியவர்கள் கலந்து கொள்ளலாம் என்றும் தங்களது பெயரில் விருப்ப மனு அளித்தவர்கள் அதற்கான கட்டணம் செலுத்திய ரசீதுடன் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. தலைமைக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.

செயலளர்கள் கூட்டம்...

முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவைத் தலைவர் மதுசூதனன், ஆட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் பா.வளர்மதி, வேணுகோபால், எம்.பி. எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன் ஆகியோர் விருப்பமனு வழங்கியவர்களிடம் நேர்காணல் நடத்துகின்றனர். இதற்கிடையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது. இந்த கூட்டம் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்றத்தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய வியூகம் குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்த கூட்டத்திற்கிடையில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப்பட்டியல் வெளியாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து