முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விராட்கோலியின் ஆட்டம் சிறப்பாக இருந்தால் உலகக்கோப்பை நிச்சயம் - ஆஸி. வீரர் ரிக்கி பாண்டிங் சொல்கிறார்

சனிக்கிழமை, 16 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

மெல்போர்ன் : விராட் கோலி தனது ஆட்டத்தை சிறப்பாக அமைத்துவிட்டால் இந்தியா உலக்கோப்பையை வென்றுவிடும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

டெல்லி அணி...

2003 மற்றும் 2007ம் ஆண்டுக்கான உலகக் கோப்பையை ரிக்கி பாண்டிங் தலைமையின் கீழான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியே கைப்பற்றியது. அனைத்து தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தற்போது ஓய்வு பெற்ற ரிக்கி பாண்டிங், வர இருக்கும் ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணியின் பயிற்சியாளராக உள்ளார்.

பதட்டம் இல்லாமல்...

இந்நிலையில் ஐ.பி.எல். குறித்தும், எதிர்வர இருக்கும் உலகக் கோப்பை குறித்தும் நாளிதழ் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்தார். அதில் விராட் கோலி இக்கட்டான நிலைமைகளில் பொறுப்பாக விளையாடுவதாக நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு ''சச்சின் டெண்டுல்கரும் இக்கட்டான நிலைமையில் பதட்டம் இல்லாமல் பொறுப்பாக விளையாடுவார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பல சமயங்களில் அவர் அப்படித்தான் விளையாடி இருக்கிறார்'' என்று தெரிவித்தார்.

என்னைப்போலவே...

மேலும் ''விராட் கோலி விளையாடுவதை பார்த்தால் அது என்னையே நினைவுப்படுத்தும். அவரின் பல ஸ்டைல்கள் என்னைப்போலவே இருக்கிறது. மைதானத்தில் அவருடைய துடுக்கும், அவரது உடல் மொழியும் அப்படியே என்னைப் போலவே இருக்கிறது. பேட்டிங் ஸ்டைலிலும் அவர் என்னையே நினைவுப்படுத்துகிறார். அவருடைய ஒருநாள் போட்டியின் சாதனைகள் ஆச்சரியத்தை அளிக்கிறது. அதனால் தான் இந்திய அணியை நான் அபாயமாக கருதுகிறேன். விராட் கோலி தனது ஆட்டத்தை சிறப்பாக அமைத்துவிட்டால் இந்தியா உலக்கோப்பையை வென்றுவிடும்” என்று தெரிவித்துள்ளார்.

பலமாக இருப்பார்...

டோனி குறித்து பேசிய அவர், ''வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் 2015க்கு பிறகு டோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவார் என்றுதான் நினைத்தேன். 2019 உலகக் கோப்பையில் அவர் விளையாட மாட்டார் என்று கூட யோசித்தேன். ஆனால் அவர் இன்னமும் சிறப்பாக விளையாடிக்கொண்டு இருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் கூட சிறப்பாக விளையாடினார். உலக்கோப்பை போட்டிக்கு இந்திய அணிக்கு டோனி பலமாக இருப்பார்'' என்றும் கூறியிருக்கிறார்.

அரையிறுதிக்குள்...

உலகக்கோப்பை அரையிறுதியை பொறுத்தவரையில் அது இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் அரையிறுதிக்குள் வந்தால் ஆச்சரியப்பட்ட ஒன்றுமில்லை என்றும் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து