முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

28 ஆண்டுகளுக்கு பிறகு தென்காசி தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

நெல்லை : தென்காசி பாராளுமன்ற தொகுதியில் 28 ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு இப்போது தி.மு.க. போட்டியிடுகிறது. 

தென்காசி பாராளுமன்ற தொகுதியில் 1996 வரை காங்கிரஸ் எம்.பி.க்களே இருந்து வந்தனர். கடந்த 1991-ம் ஆண்டு தி.மு.க. சார்பாக சதன் திருமலைக்குமார் போட்டியிட்டார். அப்போது அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அருணாசலம் வெற்றி பெற்றார். அதன் பிறகு தென்காசி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. போட்டியிடவில்லை. மேலும் தி.மு.க. நேரிடையாக ஒரு முறைகூட தென்காசி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெறவில்லை. இதனால் தி.மு.க. தென்காசி பாராளுமன்ற தொகுதியை கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்கி வந்தது.

தற்போது 1991-க்கு பிறகு 28 ஆண்டுகள் கழித்து தென்காசி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. நேரிடையாக போட்டியிடுகிறது. இதுவரை தி.மு.க. நேரிடையாக தென்காசி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெறாததால், இந்த முறை எப்படியும் தி.மு.க. வெற்றி பெற ஆயத்தமாகி வருகிறது. இதனால் தென்காசி பாராளுமன்ற தொகுதியில் இந்த முறை தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து