முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5-வது ஒருநாள் போட்டியிலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி - இலங்கை அணி ஒயிட்வாஷ்

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

கேப்டவுன் : கேப் டவுனில் நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இலங்கை 0-5 என ஒயிட்வாஷ் ஆனது. 

தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் மோதிய 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப் டவுனில் பகல்-இரவாக நடந்தது. முதலில் விளையாடிய இலங்கை அணி 49.3 ஓவரில் 225 ரன்கள் எடுத்து ‘ஆல்அவுட்’ ஆனது. மெண்டிஸ் அதிக பட்சமாக 56 ரன்னும், பெரேரா 33 ரன்னும், உடானா 32 ரன்னும் எடுத்தனர். தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபாடா 3 விக்கெட்டும், இம்ரான் தாஹிர், நார்ட்ஜி தலா 2 விக்கெட்டும் நிகிடி, பெலுக்வாயோ தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.பின்னர் 226 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா விளையாடியது. அந்த அணி 28 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 135 ரன் எடுத்து இருந்தபோது மின் விளக்கில் கோளாறு ஏற்பட்டது. மின் விளக்கில் ஏற்பட்ட கோளாறு சரியாகாததால் ஆட்டம் அத்துடன் நிறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து டக்வொர்த் லீவிஸ் விதிமுறை பின்பற்றப்பட்டது. இந்த விதிப்படி தென்ஆப்பிரிக்காவுக்கு 28 ஓவர்களில் 95 ரன் இலக்காக இருந்தது. ஆனால் அந்த அணி 135 ரன் எடுத்து இருந்தது. இதனால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி தென் ஆப்பிரிக்கா 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மார்கிராம் 67 ரன் எடுத்தார். மலிங்கா, பெரேரா தலா 1 விக்கெட் எடுத்தனர்.ஏற்கனவே 4 ஆட்டத்திலும் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருந்தது. இந்த வெற்றியுடன் ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இலங்கை அணி தான் மோதிய 5 ஆட்டங்களிலும் தோற்று ‘ஒயிட்வாஷ்’ ஆனது. அடுத்து இரு அணிகள் இடையே மூன்று 20 ஓவர் போட்டி கொண்ட தொடர் நடக்கிறது. இதன் முதல் ஆட்டம் வருகிற 19-ம் தேதி கேப் டவுனில் நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து