முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவா முதல்வர் பாரிக்கர் உடல்நலக்குறைவால் மரணம் - ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர்கள் இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

பானஜி : கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் உடல்நலக்குறைவால் நேற்று மரணமடைந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கோவா முதல்வராக பதவி வகித்து மனோகர் பாரிக்கர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார். இதற்காக வெளிநாடுகளில் சிகிச்சை பெற்ற அவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார். இதையடுத்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் சமீபத்தில் மாநிலத்துக்கான இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார். இந்த நிலையில், மனோகர் பாரிக்கரின் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்து உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து  பா.ஜ.க. மூத்த தலைவர்கள் நேற்று கோவா விரைந்தனர். இந்த நிலையில் நேற்று கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் திடீரென மரணமடைந்தார். அவரது இந்த திடீர் மறைவு பா.ஜ.க.வினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உடல்நலக்குறைவால் மரணமடைந்த மனோகர் பாரிக்கருக்கு ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து