முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : வரும் பாராளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் நடைபெறவுள்ள 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களின் பட்டியலை நேற்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் 18 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடத்தப்படுகிறது. இதில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலையும் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:

பெரம்பூர் - ஆர்.டி.சேகர், சோளிங்கர் - அசோகன், சாத்தூர் - சீனிவாசன், விளாத்திக்குளம் - ஜெயகுமார், பரமக்குடி - சம்பத்குமார், திருப்போரூர் - செந்தில் என்ற இதயவர்மன், பூந்தமல்லி - கிருஷ்ணசாமி, நிலக்கோட்டை - சவுந்தர பாண்டியன், திருவாரூர்- பூண்டி கலைவாணன், ஆம்பூர் - விஸ்வநாதன், குடியாத்தம் - காத்தவராயன், ஓசூர் - சத்யா, பாப்பிரெட்டிப்பட்டி - மணி, ஆண்டிப்பட்டி - ஏ.மகாராஜன், பெரியகுளம் - கே.எஸ்.சரவணகுமார், தஞ்சாவூர் - நீலமேகம், அரூர் - கிருஷ்ணகுமார் மானாமதுரை - கரு காசிலிங்கம் என்ற இலக்கியதாசன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.  இதேபோல், இடைத்தேர்தலை சந்திக்கும் புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் தி.மு.க. வேட்பாளராக கே.வெங்கடேசன் போட்டியிடுகிறார். இவ்வாறு மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து