முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்ற தேர்தல்: அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் - துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்தார்

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதி விவரங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் நேற்று அறிவித்தனர். தொகுதி பட்டியலை துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் வாசித்தார்.

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் மொத்தம் 8 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் அ.தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மீதமுள்ள 20 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க.வுக்கு 5, தே.மு.தி.க.வுக்கு 4 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. த.மா.கா, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, என்.ஆர். காங்கிரஸ் ஆகிய 4 கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அமைச்சர்களுடன் சென்னை அடையாரில் உள்ள கிரவுன்பிளாசா ஓட்டலுக்கு நேற்று வந்தனர். அதைத் தொடர்ந்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோரும் வந்தனர். இதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான பா.ம.க, பா.ஜக. தே.மு.தி.க.. என்.ஆர்.காங்கிரஸ்,. த.மா.கா, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகியவை போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை அறிவித்தனர். இந்த பட்டியலை துணை முதல்வர் வாசிக்கும் போது அங்கிருந்தவர்கள் கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அ.தி.மு.க. போட்டியிடும் தொகுதிகள்:-

1. சேலம், 2. நாமக்கல், 3. கிருஷ்ணகிரி, 4. ஈரோடு, 5. கரூர், 6. திருப்பூர், 7. பொள்ளாச்சி, 8. ஆரணி, 9. திருவண்ணாமலை, 10. சிதம்பரம், 11. பெரம்பலூர், 12. தேனி, 13. மதுரை, 14. நீலகிரி, 15. திருநெல்வேலி, 16. நாகை, 17. மயிலாடுதுறை, 18. திருவள்ளூர், 19. காஞ்சீபுரம், 20. சென்னை தெற்கு.

பா.ம.க போட்டியிடும் தொகுதிகள்:-

1. தருமபுரி, 2. விழுப்புரம், 3. அரக்கோணம், 4. கடலூர், 5. மத்திய சென்னை, 6. திண்டுக்கல், 7. ஸ்ரீபெரும்புதூர்

பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள்:-

1. கன்னியாகுமரி, 2. சிவகங்கை, 3. கோவை, 4. ராமநாதபுரம், 5. தூத்துக்குடி

தே.மு.தி.க. போட்டியிடும் தொகுதிகள்:-

1. கள்ளக்குறிச்சி, 2. திருச்சி, 3. சென்னை வடக்கு, 4. விருதுநகர்.

என்.ஆர். காங்கிரஸ் புதுச்சேரியிலும், த.மா.க. தஞ்சாவூரிலும், புதியநீதிக்கட்சி வேலூரிலும், புதிய தமிழகம் தென்காசியிலும் போட்டியிடுகின்றன. இவ்வாறு துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து