முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாரிக்கர் மறைவு: தலைவர்கள் இரங்கல்

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

புது டில்லி : கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவுக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மருத்துவமனையில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மனோகர் பாரிக்கர் மறைவு செய்தி மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. பொது வாழ்க்கையில் மனோகர் பாரிக்கரின் சேவையை நாட்டு மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள். முதல்வர் பாரீக்கரின் அகால மறைவு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் உள்ள நேர்மையான மற்றும் அனைவராலும் விரும்பப்படுகின்ற அரசியல்வாதி என்று என்று துணை ஜனாதிபதி  வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மனோகர் பாரிக்கர் ஈடு இணையில்லாத தலைவர். உண்மையான தேசபக்தர். சிறந்த நிர்வாகி. அனைவராலும் பாராட்ட பெற்றவர். நாட்டிற்கு அவர் ஆற்றிய பணிகள் பல தலைமுறையினரின் நினைவில் இருக்கும். அவரது மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று பிரதமர் மோடியும், தனது நோயை எதிர்த்து ஒரு ஆண்டுக்கும் மேலாக போராடிய கோவா முதல்வர் மனோகர் பரீக்கரின் மறைவு வருத்தமளிக்கிறது. கட்சி எல்லைகளை தாண்டி அவருக்கு அனைவரும் மரியாதை அளித்தனர். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுலும்,

பரீக்கர் மறைவு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. உண்மையான தேசபக்தரை நாடு இழந்துள்ளது. கொள்கைக்காகவும், நாட்டிற்காகவும் தனது வாழ்க்கையை பாரிக்கர் அர்ப்பணித்தவர் என்றுஅமித்ஷாவும்,

கோவா முதல்வர் பரீக்கர் மறைவு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. சிறந்த நபர். தேசப்பற்று மிக்கவரை நாம் இழந்துவிட்டோம். அர்ஜென்டினாவுக்கு அரசுமுறை பயணமாக செல்லும் வழியில், அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற பரீக்கரை சந்தித்ததை இந்த தருணத்தில் நினைவு கூறுகிறேன் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து