முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நாளை முதல் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார்.

திங்கட்கிழமை, 18 மார்ச் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு சேகரிக்க தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் 20ந்தேதியன்று திருவாரூர் தொகுதியில் இருந்து தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அங்கு, பொது கூட்டத்தில் பேசும் அவர், தஞ்சை திலகர் திடல் பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார்.

இதனை தொடர்ந்து 21ந்தேதியன்று பெரம்பலூர் மற்றும் 22ந்தேதியில் சேலம் பகுதிகளில் பிரசாரம் செய்யும் ஸ்டாலின், தருமபுரியில் உள்ள ஒடசல்பட்டி பகுதியில் நடைபெறும் பொது கூட்டத்தில் பேசுகிறார்.

இதன்பின் 23ந்தேதி அரூர் மற்றும் திருவண்ணாமலை பொது கூட்டங்களில் பேசும் ஸ்டாலின், 24ந்தேதி வட சென்னை, 25ந்தேதி காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்கிறார்.

இதுபோல, 26ந்தேதி திண்டுக்கல், நிலக்கோட்டை, 27ந்தேதி தேனி, ஆண்டிப்பட்டி, 28ந்தேதி மதுரை, விருதுநகர், சாத்தூர் 29ந்தேதி சிவகங்கை, ராமநாதபுரம், பரமக்குடி பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

30ந்தேதியன்று கிருஷ்ணகிரி, ஓசூரில் பிரசாரம் செய்யும் ஸ்டாலின், 31ந்தேதியன்று வேலூரிலும், ஏப்ரல் 1ந்தேதி அரக்கோணம் மற்றும் தென்சென்னை பகுதிகளிலும் வாக்கு சேகரிக்கிறார்.

ஏப்ரல் 2ந்தேதி நீலகிரி, 3ந்தேதி திருப்பூர், கோவையில் பிரசாரம் மேற்கொள்ளும் ஸ்டாலின், 4ந்தேதி பொள்ளாச்சி, ஈரோட்டில் பயணம் செய்கிறார்.

ஏப்ரல் 5ந்தேதி கரூர் மற்றும் கள்ளக்குறிச்சியில் சுற்றுப்பயணம் செய்யும் ஸ்டாலின், 6ந்தேதி விழுப்புரம் மற்றும் ஆரணியிலும் வாக்கு சேகரிக்க உள்ளதாக தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து