முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் - நகரி தொகுதியில் நடிகை ரோஜா போட்டி

திங்கட்கிழமை, 18 மார்ச் 2019      இந்தியா
Image Unavailable

ஐதராபாத் : ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் முழுமையான வேட்பாளர் பட்டியல்  வெளியிடப்பட்டது.நகரி தொகுதியில் நடிகை ரோஜா போட்டியிடுகிறார்.

ஆந்திராவில் மக்களவைத் தேர்தலோடு சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல்11-ம் தேதி மக்களவை, சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

ஆளும் தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், பா.ஜ.க, காங்கிரஸ், ஜன சேனா கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது.

இந்தப் பின்னணியில் மாநிலத்தில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகள், 175 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்  வெளியிட்டது. கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி புலிவெந்துலா சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். கட்சியின் நகரி சட்டப்பேரவைத் தொகுதி எம்.எல்.ஏ நடிகை ரோஜா மீண்டும் அதே தொகுதியில் களமிறங்குகிறார். பழைய, புதிய முகங்களுக்கு சரிசமமாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தரப்பில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 41 பேர், தாழ்த்தப்பட்டோர் 29 பேர், பழங்குடியினர் 7 பேர், சிறுபான்மையினர் 5 பேருக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதேபோல 2014 சட்டப்பேரவைத் தேர்தலில் அந்த கட்சி 70 தொகுதிகளைக் கைப்பற்றியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து