முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக முதல்வர், துணை முதல்வர், தமிழக வனத்துறை அமைச்சரிடம் நிலக்கோட்டை சட்டமன்ற அ.தி.மு.க வேட்பாளர் தேன்மொழிசேகர் பூங்கொத்து கொடுத்து ஆசி பெற்றார்

திங்கட்கிழமை, 18 மார்ச் 2019      திண்டுக்கல்
Image Unavailable

வத்தலக்குண்டு, - தமிழக முதல்வர், துணை முதல்வர், தமிழக வனத்துறை அமைச்சரிடம் நிலக்கோட்டை சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தேன்மொழிசேகர் பூங்கொத்து கொடுத்து ஆசி பெற்றார்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர் தேன்மொழி சேகர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் மற்றும் அதிமுக உயர்மட்ட நிர்வாகிகளிடம் பூங்கொத்து கொடுத்து ஆசிபெற்றார். அப்போது திண்டுக்கல் மாவட்ட கழக செயலாளர் மருதராஜ், நிலக்கோட்டை ஒன்றிய கழக செயலாளர் யாகப்பன், வத்தலக்குண்டு ஒன்றிய கழக செயலாளர் பாண்டியன், நிலக்கோட்டை பேரூர் கழக செயலாளரும், முன்னாள் பேரூராட்சி தலைவருமான சேகர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.
நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் தேன்மொழி சேகர் இவர் 12ம் வகுப்பு படித்துள்ளார். 13.03.1962ம் தேதி பிறந்துள்ளார். தற்போது வயது 57, இவருடைய கணவர்  சேகர் நிலக்கோட்டை   பேரூர் கழக செயலாளராக உள்ளார். முன்னாள் பேரூராட்சி தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இவர் நிலக்கோட்டையில் குடியிருந்து வருகிறார். இவருக்கு ஒருமகள் பெயர் சுப்புலெட்சுமி டாக்டராக உள்ளார். திருமணம் ஆகிவிட்டது. மகன் சந்திரசேகர் டாக்டர் படித்துள்ளார். திருமணம் ஆகவில்லை. இவர் முன்னாள் மாவட்ட இணை செயலாளராக பதவி வகித்தார். ஏற்கனவே நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 2006 முதல் 2011 வரை எம்.எல்.ஏவாக பணியாற்றியுள்ளார். தற்போது நிலக்கோட்டை சட்;டமன்ற தொகுதியில் இரண்டாவது முறையாக அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து