முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜபாளையம் ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் 6 வது ஆண்டு விழா

திங்கட்கிழமை, 18 மார்ச் 2019      விருதுநகர்
Image Unavailable

 ராஜபாளையம் - ராஜபாளையம் ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆஃப்   டெக்னாலஜியின் 6வது ஆண்டு விழாவானது ராம்கோ குழுமத்தின் சேர்மன் பி.ஆர். வெங்கட்ராமராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் கல்லூரியின் துணைமுதல்வர் எஸ்.ராஜகருணாகரன் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் ஆண்டு அறிக்கையை முதல்வர் ஜவஹர் வாசித்தார். சிறப்பு விருந்தினராக டிவிஎஸ் - இயக்குனர் கோவைச்செல்வன் கலந்துகொண்டு பேசுகையில்
மாணவர்கள் கல்லூரியை விட்டு செல்லும் பொது தங்களின் தனித்திறமைகளையும் அறிவாற்றலையும் வேலை வாய்ப்பிற்காக பயன்படுத்துவதோடு மட்டுமல்லாது தாங்கள் கற்றுக்கொண்ட ஒழுக்கம், நர்குணங்கள் ஆகியவற்றை கடைபிடித்து கல்லூரியின் பெயரையும் சுயவாழ்கையில் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தி பேசினார். வாழ்வில் வெற்றியடைய மாணவர்கள் கல்விக்கு அப்பாற்பட்டு விஞ்ஞானம், ஆராய்ச்சி, விளையாட்டு போன்ற மற்ற துறைகளிலும் ஈடுபட்டு வாழ்வில் மிகச்சிறந்த பொறியாளராக ஜொலிக்க வேண்டுமென்று அறிவுறுத்தி பேசினார். மாணவர்கள் உடல்நலம் கருதி யோகா மற்றும் உடற்பயிற்சியில் தினசரி ஈடுபடவேண்டுமென்றும், மாணவர்கள் மேற்படிப்பிற்காக கேட், ஐ.இ,எல்.டி.எஸ், நீட், டான்செட் போன்ற தேர்வுகளில் சிரத்தையுடன் பயிற்சிபெற்று வெற்றிபெற வாழ்த்திப்பேசினார்.
ஒவ்வொரு பாடப்பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகளுடன், கல்வி உதவித்தொகை மற்றும் திறமையான மாணவர்களை உருவாக்கிய பேராசிரியர்களுக்கு ஊக்கப்பரிசுகளையும் வழங்கி சிறப்புரை ஆற்றினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் துணைப்பொது மேலாளர் செல்வராஜ் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர். கல்லூரியின் 2014-2018-ன் ஆண்டிற்கான மிகச்சிறந்த மாணவராக பிரேம்குமார் தேர்ந்தெடுக்கப்பெற்று கவரவிக்கப்பட்டார். விழா முடிவில் மாணவி ஹரினி நன்றியுரை வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து