முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெஸ்சி அபார ஹாட்ரிக் கோலால் ரியல் பெட்டிஸ் அணியை வீழ்த்தியது பார்சிலோனா

திங்கட்கிழமை, 18 மார்ச் 2019      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : லா லிகா கால்பந்து தொடரில் மெஸ்சியின் 51-வது ஹாட்ரிக் கோலால் ரியல் பெட்டிஸ் அணியை 4-1 என வீழ்த்தியது பார்சிலோனா.

முன்னிலை...

லா லிகா கால்பந்து தொடரில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பார்சிலோனா - ரியல் பெட்டிஸ் அணிகள் மோதின. இதில் பார்சிலோனா அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான மெஸ்சி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் 18-வது நமிடத்தில் ‘ப்ரீ ஹிக்’ வாய்ப்பை பயன்படுத்தி முதல் கோலை பதிவு செய்தார். முதல் பாதி நேரம் முடிவடைவதற்கு சற்று முன் (45+2) 2-வது கோலை பதிவு செய்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் பார்சிலோனா 2-0 என முன்னிலைப் பெற்றது.

4-1 என்ற கணக்கில்...

2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 63-வது நிமிடத்தில் மற்றொரு நட்சத்திர வீரர் சுவாரஸ் கோல் அடித்தார். 82-வது நிமிடத்தில் ரியல் பெட்டிஸ் அணியின் லோரென் மொரோன் கோல் அடித்தார். மெஸ்சி 85-வது நிமிடத்தில் 3-வது கோல் அடித்தார். இதனால் பார்சிலோனா 4-1 என வெற்றிபெற்றது. மெஸ்சி இந்த போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்ததன் மூலம் தனது 51-வது ஹாட்ரிக்கை பதிவு செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து